கொடி வேணும்னு கேட்டா நாமளே கொடுத்திருப்போம்! – மேட் இன் சைனா விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு!
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் கூட்டத்தில் சீன தயாரிப்பு இந்திய கொடிகள் வைத்திருந்தது குறித்து சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்திய தேசிய கொடிகளை தாங்கி பேரணியில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகவே சுதந்திர தினத்திற்கு நாடு முழுவதும் தேசிய கொடிகள் விநியோகிக்கப்பட்டபோது தேசிய கொடிகள் உள்நாட்டு உற்பத்தியாகவும், பாலிஸ்டர் அல்லாத பருத்தி துணியினால கொடிகளாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சபாநாயகர் அப்பாவு, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் “தமிழ்நாட்டில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கள் பகுதிகளில் சொன்னால் 100 கோடி தேசியக் கொடிகளை ஒரே நாளில் தயார் செய்து தருவார்கள். காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்திய தேசியக் கொடிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.