வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:37 IST)

கடன் செயலிகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட 500 கோடி: அதிர்ச்சி தகவல்

loan
கடன் செயலிகள் மூலமாக வட்டிக்கு கொடுத்து வசூலிக்கப்பட்ட பணம் 500 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
 
ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக அதிக வட்டிக்கு கடன் வழங்கி ரூபாய் 500 கோடி வரை கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. கடன் வாங்கி கொடுக்காதவர்களின் நிர்வாண படங்களை பயன்படுத்தி பணம் பறித்த குறித்து டெல்லி சிறப்பு போலீசார் விசாரணை செய்தது 
 
இந்த விசாரணையில் 100 செயலிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் இந்த செயலிகள் அனைத்தும் சீனா மற்றும் ஹாங்காங் ஹாங்காங்கில் இருந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் லக்னோவில் உள்ள கால் சென்டர் வழியாக சீனாவுக்கு ரூ.500 கோடி வரை பணம் அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக இதுவரை 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது