வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:17 IST)

சீன விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா: பொறுப்பற்ற செயல் என சீனா கண்டிப்பு!

Flight
அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமானங்களை அமெரிக்க விமான நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில் இது பொறுப்பற்ற செயல் என சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது
 
அமெரிக்கா ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது
 
இதற்கு பதிலடியாக சீனாவின் 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது
 
ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் கொரோனா தொற்று இல்லாத பயணிகளுக்கு சீனா சென்ற பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது