1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (12:48 IST)

அடுத்த 24 மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்பு பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.