36லிருந்து 57ஆக உயர்ந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்! – மீண்டும் அபாயத்தில் சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் கடும் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. பிறகு மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் அதிகமாக இருந்ததால் பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருந்தது. இதனால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மெல்ல சென்னையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தற்போது சென்னையில் தளர்வுகள் அமலில் உள்ளதால் வெளிமாவட்டத்திலிருந்து பலரும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னையில் பாதிப்புகள் குறைந்ததால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டு 36 ஆக இருந்தது. இந்நிலையில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு பகுதிகள் 36லிருந்து 57 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.