திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2024 (16:41 IST)

இன்றிரவு 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று இரவு கன மழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் உருவாகியுள்ள டானா புயல், ஒரு பக்கம் கரையை கடக்க நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, நீலகிரி, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
 
Edited by Siva