ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2024 (07:32 IST)

டானா புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இக்காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைந்தது. இவ்வாறு வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு, டானா புயலாக மாறியுள்ளது.

இந்த டானா புயல், 24-ந்தேதி அதிகாலை, வடமேற்கு வங்கக்கடலில் தீவிரமாக பரவுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், கொல்கத்தா விமான நிலையம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் நாளை நள்ளிரவு ஒடிசா மற்றும் மேற்குவங்க இடையே கரையை கடக்கவுள்ளது. இதன் விளைவாக, நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு கொல்கத்தா விமான நிலையம் செயல்படாது. மேலும், புயல் வீசியபோது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கன மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ஒடிசா மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வர் நகரத்தின் விமான நிலையம் 16 மணி நேரம் மூடப்பட்டதாகவும் அதாவது இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


Edited by Siva