வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (13:18 IST)

வாக்களிக்கும்போது பவர் கட்! – செல்போன் டார்ச்சால் ஜனநாயக கடமை நிறைவேற்றம்!

திருவாரூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது மின்சாரம் கட் ஆனதால் செல்போன் டார்ச் மூலம் மக்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் வாக்கு சாவடி மையம் உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அறை இருட்டாக இருந்ததால் மக்களுக்கு செல்போன் டார்ச்சை அடித்து சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்த தேர்தல் அலுவலர்கள் உதவினர். சிறிது நேரத்தில் மின் இணைப்பு சரிசெய்யப்பட்டது.