புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (12:47 IST)

சட்டமன்ற தேர்தலை விட மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள்! – உதயநிதி நம்பிக்கை!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

சேப்பாக்கம் திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குசாவடி சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் எவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தந்தார்களோ அதைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றி தெரிவித்துள்ளார்.

மேலும் “ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் முதல்வர் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும், கொடுத்திருக்க கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்கட்டும், அதற்கெல்லாம் தமிழக மக்கள் சரியான ஒரு அங்கீகாரத்தை உள்ளாட்சி தேர்தலில் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.