வியாழன், 30 நவம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:12 IST)

மக்களின்பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது?’’ - டிடிவி.தினகரன்

ttv dinakaran
‘’மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது?’’  என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார்  முதல் கட்ட விசாரணை செய்ததில், இந்த ஏடிஎம்களில் கொள்ளை அடித்தவர்கள் வட இந்தியர்கள் என்றும் குறிப்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அரியானா மாநிலத்திற்கு இரண்டு தனிப்படைகள்  விரைந்துள்ளன்ர்.
இந்த நிலையில்,சென்னை, திருவண்ண்ணாமலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து குற்றசம்பவங்கள் நடந்துள்ளது குறித்து, அம்முக பொதுச்சசெயலாளார்டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ATMகளில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை..

கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.