ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (10:27 IST)

திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்! – தொடர்ந்து சேதமாகும் தலைவர் சிலைகள்!

சமீப நாட்களாக தமிழக தலைவர்கள் சிலை சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது திருவள்ளூரிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது, அண்ணா சிலை அருகே காவிக்கொடி வைத்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. தலைவர்கள் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது திருவள்ளூரில் மீண்டும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.