1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 11th results released in Tamilnadu

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! – எந்த தளத்தில் பார்க்கலாம்?

Tamilnadu
தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கான ரிசல்ட் இன்று வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.

இன்று காலை 09.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 94.38% சதவீதம் பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in/http://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.in என்ற தளத்தில் பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம்