திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (11:12 IST)

உரிமை மறுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்: கலெக்டர் முன்னிலையில் கொடியேற்றியதால் பரபரப்பு

கலெக்டர் முன்னிலையில் கொடியேற்றியதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆத்துபாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் அமிர்தம்  என்பவர் தேசியக்கொடியை ஏற்ற கூடாது என ஊராட்சி மன்ற பொறுப்பாளர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
மேலும் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம். என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் இன்று தேசிய கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்தன்று பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என கூறி மறுக்கப்பட்ட உரிமை, இன்று மாவட்ட ஆட்சியர் முன் நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது