திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (11:13 IST)

காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்து காதலன் தற்கொலை முயற்சி செய்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
 
திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக 21 வயது சத்தியஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் 25 வயதில் நரேந்திரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நட்பு இருந்ததாகவும் அதன் பின் இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் திடீரென இருவருக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியஸ்ரீயின் கழுத்தில் திடீரென அறுத்ததாகவும் பின்னர் தானும் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் கழுத்தில்  கத்தியால் தாக்கப்பட்ட சத்தியஸ்ரீ ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில்சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran