திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:57 IST)

காதலியை வீட்டுக்கு அழைத்து வந்த கல்லூரி மாணவன்.. தட்டி கேட்ட குடும்பத்தினர்கள் கொலை..!

கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததை குடும்பத்தினர் தட்டி கேட்டதால் அவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
மதுரை சேர்ந்த கல்லூரி மாணவர் தனது காதலி என்று கூறி இளம் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனை அவரது வீட்டில் உள்ள  மகிழம்மாள் மற்றும் அழகுப்பிரியா  ஆகியோர் கண்டித்ததாக தெரிகிறது. 
 
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  
 
இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவரின் நண்பரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காதலிக்காக தனது வீட்டில் உள்ள நபர்களையே கல்லூரி மாணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 
Edited by Siva