1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:28 IST)

எங்க காதலுக்கு எண்டே கிடையாது… காதலியுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்த அர்ஜுன் கபூர்!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலைகாவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 

நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தியை பாலிவுட் ஊடகங்கள் வெளியிட ஆரம்பித்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக அர்ஜுன் கபூர் மலைகா அரோராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.