1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (19:28 IST)

பல மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்சேவை தொடக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திருச்செந்தூர் பாலக்காடு ரயில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது
 
இன்று முதல் திருச்செந்தூர் பாலக்காடு இடையிலான ரயில் பயணிகள் ரயில் தொடங்கியுள்ளதை அடுத்து பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் 
 
ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் தற்போது திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் விரைவு ரயில் பல மாதங்களுக்கு பிறகு இன்று தன் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது
 
இதனால் பிற மாநில பக்தர்கள் திருச்செந்தூர் வருவது அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வியாபாரமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது