1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (07:52 IST)

6 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரயில்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில ரயில்களில் இணைக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் 6 ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த ஆறு ரயில்கள் பின்வருமாறு
 
1. வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்
 
2. வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ்
 
3. வண்டி எண் 16854: விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்
 
4. வண்டி எண் சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்
 
5. வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
 
6. வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் - மேட்கான் பாசஞ்சர்
 
மேற்கண்ட ஆறு ரயில்களில் மறு மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.