வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (08:28 IST)

32 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம்.. சூரி படம் போலவே ஒரு சலுகை..!

சூரி நடித்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம் என்ற சலுகை இருக்கும் நிலையில் சூரி அந்த பரோட்டாவை சாப்பிட்டு விட்டு பின்னர் கோட்டை அழித்து விடுங்கள் மறுபடியும் முதல்ல இருந்து சாப்பிடுகிறேன் என்ற காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த காமெடி காட்சிகளுக்குப் பிறகுதான் சூரி தமிழ் சினிமாவில் பிரபலமானார் என்பதும் இன்று அவர் கதாநாயகனாகி உச்சத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் காட்சியை போன்றே திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் 32 பரோட்டா சாப்பிட்டால் அவர் சாப்பிட்ட பணத்திற்கு பணம் தர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீங்க வேணும்னா பந்தயத்திற்கு வருகிறீர்களா என்ற இந்த அறிவிப்பை திருச்செந்தூர் அன்னை நைட் கிளப் ஹோட்டலில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விளம்பரத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் காட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை பார்த்து ஏராளமானோர் இந்த கடைக்கு 32 பரோட்டா சாப்பிட முயற்சித்ததாகவும்,  ஆனால் இதுவரை யாரும் 32 பரோட்டா சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விளம்பரத்திற்கு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று கூறப்படும் நிலையில், பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு யாராவது உயிரை விட்டு விட்டால் யார் பொறுப்பாவாவது?  இது போன்ற விளம்பரம் தேவையில்லை என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

Edited by Siva