திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!
தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் செயல்பட்டு வரும் நிலையில் அவை வெளியேற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்தின் வாகனங்களை தவிர்த்து, பல தனியார் ஆம்னி பேருந்துகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பலவும் தமிழ்நாட்டிற்குள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவெண்ணுடன் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்ட நிலையில் அவை தமிழ்நாட்டிற்குள் இயக்க அனுமதி இல்லை என வெளியேற போக்குவரத்து துறை உத்தரவிட்டது.
நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றி ஜூன் 17ம் தேதி வரை இயக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமைக்கு மேல் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டால் சிறை பிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K