1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (17:42 IST)

ஜெயக்குமார் மரண வழக்கில் நீடிக்கும் மர்மம்..! மகனிடம் சிபிசிஐடி விசாரணை..!!

Jayakumar CBCID
காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரணம் வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்க முடியாத நிலையில், அவரது மகனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த மாதம் 2 ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த மாதம் 4 ஆம் தேதி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால்,  சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 
 
இந்தநிலையில் அவர் உயிரிழந்து கிடந்த தோட்டத்தின் கிணறு, மோட்டார் ரூம் மற்றும் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் இன்று சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ரமணன், ஐ.ஜி அன்பு எஸ்.பி முத்தரசி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது ஜெயக்குமாரின் மகன் கருணையா ஜப்ரினையும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.