வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:19 IST)

மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு.. ஒருவர் காயம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் காயமடைந்ததாகவும் இதுகுறித்து விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு என்ற பகுதியில் திடீரென டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு காரணமாக நவீன் குமார் என்பவர் காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது

மேலும் நவீன் குமார் அருகே நின்று இந்த ஆட்டோ டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மதுரை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் முன்விரோதம் காரணமாக நவீன் குமார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

நவீன் குமார் வெளிநாட்டில் பணியாற்றியபோது ஒரு குழுவுடன் தகராறு ஏற்பட்டதாகவும் அந்த தகராறு காரணமாக தான் மதுரையில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva