1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:11 IST)

ஜோராக நடைபெறும் மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.. சிறப்பான ஏற்பாடுகள்

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது. இதைக்காண அதிகாலையிலேயே கோயிலில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன்.
 
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் நேரத்தில் அணிந்துகொள்வதற்காக பெண்கள் புது தாலிக்கயிறு வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இன்று வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் மாட வீதிகள் முழுவதும் நிழல் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. 
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ள பக்தர்கள் அதை பார்த்து ரசித்து வருகின்றனர்.
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய  6 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தியும், 6 ஆயிரம் பேர் இலவச தரிசனத்திலும் என என மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும்  மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறும் என்பதும், ஏப்ரல் 23-ம் தேதி தீர்த்தம், தெய்வேந்திர பூஜை, ரிஷப வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva