வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (16:19 IST)

அண்ணன் - தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை !

வடலூர் அருகே மாவட்டம், அருகே அண்ணன் - தம்பி இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டையை தடுக்க வந்த தங்கை கொடூர முறையில் கல்லால் தாக்கி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் சேராக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன் 58; ராமலிங்கம் 56; இவர்களுக்கு செல்வி என்ற தங்கச்சி (42)உள்ளார்.
 
செல்வி சிறு வயதில் இருந்தே உடல் வளர்ச்சி குன்றியவர்.  திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தந்தையின் வீட்டை பாகப்பிரிவினை செய்து தனித்தனியாக குடும்பமாக வசித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் ராமலிங்கத்திற்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில் 4 பெண்குழந்தைகளுக்கு  திருமணம் ஆகி புகுந்த வீடு சென்றுவிட்டனர்.அதனால் பூர்வீக வீடு தனக்கே வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
 
நேற்று முன்தினம் இதேபோல் இரவில் மதுகுடித்துவிட்டு தகராறு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனக் கண்டித்து ராமலிங்கத்தின் மனைவியை ரவிச்சந்திரன் அவரது மகன் செந்தில் குமார் (28), ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இவர்களது சண்டையை செல்வி தடுக்க வந்துள்ளார். அவரையும் இருவரும் மரக்கட்டை, கல்லால் தாக்கியுள்ளர். இதில் செல்வி மயக்கம் அடைந்தார்.அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.