திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (20:47 IST)

டிக் - டாக் செயலியால் காதல் ! காதலன் - காதலி தற்கொலை முயற்சி : திடுக் சம்பவம்

நெல்லையில் டிக் டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு தான் காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனது தெரிந்ததால் வலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது அவரை மருத்துவனையில் சேர்த்திருப்பதை அறிந்து அங்கு வந்த காதலியும் விஷம் குடித்ததால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள இலந்தை என்ற பகுதியில் வசிப்பவர் மரிய புஷ்பராஜ் (22). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். திருமணம் ஆகவில்லை. இவரி டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் மதுரையை சேர்ந்த சங்கீதா (20) என்ற பெண்ண்டன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் இருவரும் அடிகடி வெளியூர் சென்று தனியாக தங்கியுள்ளனர்.அதனால் சங்கீதா கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து புஷ்பராஜ் ,சங்கீதா வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடம் வசித்துவருவது தெரியவந்தது.
 
இதனால் மனமுடைந்த புஷ்பராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.பின்னர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கீதா மரிய புஷ்பராஜை சந்திக்க ஆஸ்பத்திருக்கு வந்தார். அங்கு அவரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.