1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (10:53 IST)

சென்னை 382 தினம்: தமிழக முதல்வர் வாழ்த்து!

சென்னையின் 382வது தினம் இன்று சென்னை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து செய்தி செய்தி தெரிவித்துள்ளார்
 
சென்னை நகரம் தோன்றி 382 ஆண்டுகள் ஆனதை அடுத்து சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
சீர்மிகு சிங்கார, வந்தாரை வாழவைக்கும் தர்மமிகு சென்னை பழைய அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்கு பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்தது திமுக அரசு. இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு சென்னை நாள் நல்வாழ்த்துக்கள்’ என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
 
சென்னை 382 தினம்: தமிழக முதல்வர் வாழ்த்து