ஓட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து பலி! – தஞ்சாவூரில் பரபரப்பு!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்கு செலுத்த வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளை வரிசையில் காத்திருக்க செய்யாமல் உடனடியாக வாக்கு செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாபநாசம் தொகுதிகுட்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் வயதான அர்ஜுனன் என்ற முதியவர் வாக்கு செலுத்த வந்துள்ளார்.

வாக்கு செலுத்தி விட்டு திரும்புகையில் வாக்குசாவடியிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :