1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:30 IST)

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? உதயநிதி அடடே விளக்கம்!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்தார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.