1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu election vote percentage increase

மதியத்துக்குள்ள முடிச்சிட்டு கிளம்பிடுவாங்க போல..! – 11 மணிக்குள் 25 சதவீதம் தாண்டிய வாக்குப்பதிவு!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணிக்குள்ளாக ஓட்டுப்பதிவு 25% தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்றுகாலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், கொரோனா உள்ளிட்ட காரணங்களாலும் காலை வேளையிலேயே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவீதம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 11 மணிக்குள் தமிழகம் முழுவதும் 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. பல பகுதிகளில் வாக்கு இயந்திரம் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஏன் சைக்கிளில் வந்தார் நடிகர் விஜய் ?