1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:22 IST)

கோவையில் ஓட்டுக்கு பணம்; காங்கிரஸ் – நாம் தமிழர் இணைந்து போராட்டம்!

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் – நாம் தமிழர் கட்சி இணைந்து போராட்டம் நடத்தி வருவது வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார், மநீம கமல்ஹாசன் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசன் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸினர் கோவை தெற்கு தொகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப்பும் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸை ஈழ தமிழர் பிரச்சினையில் விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒருவர் காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.