வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (13:34 IST)

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் இதுதான் நடக்கும்.! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

Flag
தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. 
 
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம் வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி ஜெயச்சந்திரனிடம், வழக்கறிஞர் முறையீடு செய்தார். 

தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

 
தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.