ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (14:25 IST)

இன்று மாலை சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
இன்று மாலை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை அடுத்து தட்பவெப்ப நிலை மாறி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை ,  செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தின் சில இடங்களிலும் பு இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva