வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (16:45 IST)

சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர்  காயத்ரி கிருஷ்ணன் இன்று  சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.  

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும்  நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னின்று  நடத்தி வருகிறது.  இன்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது விட்டில் இருந்து, 1 கி.மீ தூரமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வருகை புரிந்தார்.

மாவட்ட ஆட்சியருடன் இன்று அதிகாரிகளும் அலுவலகத்திற்குச் சைக்கிளில் வந்தனர். இது மக்களிடையே ஆச்சர்யத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.