கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.