வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (10:41 IST)

விடிய விடிய மழை - திருவண்ணாமலை அதிகபட்ச மழை பதிவு

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல். 

 
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கன மழை பெய்தது. 
 
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதோடு தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, செய்யாறில் தலா 11 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலக பகுதியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.