2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று, அவரது புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில், பாஜக-அதிமுக கூட்டணிக்கு முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. அனேகமாக, அந்த கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணியில் இணையலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தாலும், ரஜினிகாந்த் இந்த கூட்டணிக்காக முயற்சி செய்வார் என்றும், அதற்காகத்தான் அவர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால், விஜய் கட்சி எந்த கூட்டணியில் இணையும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edited by Siva