செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (09:31 IST)

தடுப்பு சுவரில் மோதிய ஷேர் ஆட்டோ; 3 பேர் பலி! – தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

தாம்பரத்தில் ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதிய சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூரிக்கு 9 பேரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டுள்ளது. இரும்புலியூர் சிக்னல் அருகே செல்லும்போது வேகமாக சென்ற ஷேர் ஆட்டோ முன்னால் சென்ற ஆம்னி வேன் மீது மோதாமல் இருக்க திரும்பும்போது சாலை தடுப்பு சுவரில் மோதி மறுபக்கம் சாய்ந்தது.

அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.