1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thiruvanamalai maha deepam today evening

திருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை
திருவாண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில், மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் இன்று காலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஒரு தீபத்திலிருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் அந்த தீபத்திலிருந்து ஒரு தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை கண்டுகளிக்க 20 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
கல்வி கடன்கள் ரத்து செய்யப்படுவது உண்மையா? நிதியமைச்சர் விளக்கம்