1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (14:54 IST)

சசிகலா கைய காட்டரவன் தான் சிஎம்: டிவிஸ்ட் அடிக்கும் சு.சுவாமி!!

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் யாரை கைக்காட்டுகிறரோ அவர்தான் முதல்வர் ஆவார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.   
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது.    
ஆனால், கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.  
 
இதனைத்தொடர்ந்து சசிகலா அதிமுகவில் இனைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதிமுகவில் உள்ள சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொள்ள மாட்டோம் எனவும், சிலர் இது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் எனவும் கூறி வருகின்றனர். 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்திற்கு புதிய தலைமை வேண்டும் அதற்காக எனது உதவி இருக்கும். தமிழகத்தின் புதிய தலைமை சசிகலாதான். சசிகலா நினைப்பவர்தான் முதலமைச்சராக வருவார் என பேசியுள்ளார். 
 
இதற்கு முன்னரும், சசிகலாவுக்கு கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்த அவருக்கு திறமை உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.