செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (13:06 IST)

பாஜக கைவிட்டால் அதிமுக கவிழ்ந்திரும்... சவுண்டு விடும் டிடிவி தினகரன்!!

மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் அதிமுகவை கைவிட்டால் நிச்சயம் தற்போதைய ஆட்சி நீடிக்காது என தினகரன் பேசியுள்ளார். 
 
இந்திய தேர்தல் ஆனிஅயத்தில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 
 
அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார். 
உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அமமுகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் தேதி ஜோசியம் பார்த்து முடிவு செய்யப்பட்டது. 
 
மத்திய அரசுக்கு இப்போது தான் இவர்கள் (அதிமுக) யார் என்பது தெரிந்துள்ளது. மத்தியில் ஆட்சி செய்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் தற்போதைய அதிமுக ஆட்சி கவிந்துவிடும் என பேசியுள்ளார்.