திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (20:13 IST)

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என்றும், அக்கட்சி தோழமை கட்சியே என்றும் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபோதிலும், விசிக கட்சிக்கு  வேறு வழி இல்லாததால் மீண்டும் மீண்டும் திமுகவையே சுற்றி சுற்றி வருகிறது.

சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு தான் இன்னும் திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதை காண்பித்து கொண்டார்

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெறும் "தேசம் காப்போம்" மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பதற்கான தேதியை உறுதி செய்வதற்காகவே இந்த சந்திப்பு என தகவல்கள் வெளிவந்துள்ளது.