செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (13:06 IST)

செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமா?: என்ன சொல்கிறார் நேரு

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க., வில் இணைந்தது கரூர் மாவட்டத்திற்கு கூடுதல் பலம் என்று கருரில் தி.மு.க நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு பேட்டி அளித்தார்.



அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிந்து விலகி கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் போக்குவரத்த துறை அமைச்சர் செந்தில் பாலஜி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஸ்டாலின் முன்னிலை இணைந்தார். வரும் 27 ம் தேதி கரூர் மாவட்டத்தில் தி.மு.க., பொது கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். மேலும் அந்த விழாவில் செந்தில்பாலாஜி தனது அதாரவளர்களுடன் இணைப்பு விழாவும்  நடைபெறவுள்ளது. பொது கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்காகன பூமி பூஜை மற்றும் கால்கோல் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க., கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என் நேரு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கும்போது,  தன்னுடன் கடந்த 10 ஆண்டு காலமாக உடன் இருந்தவர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை எல்லாம், வரும் 27 ம் தேதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள பொது கூட்டத்தில் இணைக்க உள்ளார். கரூர் தொகுதியில் ஏற்கனவே அவர் (செந்தில் பாலாஜி) போட்டியிட்ட போது மேலும், கரூர் நகர் பகுதியில் 5000 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றியிருந்தோம். கரூர் மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு கூடுதல் பலம்தான் அவரை பற்றி எனக்கு நன்று தெரியும் நன்கு பணியாற்ற கூடியவர் செந்தில்பாலாஜி, நான் வகித்த துறையிலும் எனக்கு பின்னால் வேலை பார்த்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்களும், அ.தி.மு.க., வை சார்ந்தவர்களும் அவருடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கின்றனர். எந்த இயக்கத்திலிருந்து தி.மு.க., வுக்கு வந்தாலும் தி.மு.க., அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும். தி.மு.க., வில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமா என்று கேள்விக்கு, அவர் நான் சாதாரணமான நபர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றார்.

சி.ஆனந்தகுமார்