ஒ.பி.எஸ். தம்பியால் அ.தி.மு.க வுக்குள் அதிகாரப் போர் !

Last Modified வியாழன், 20 டிசம்பர் 2018 (10:09 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். தம்பி ஓ ராஜாவால் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையே பனிப்போர் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.ராஜா. இவர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியாவார். இந்தத் தேர்தலில் ஓ. ராஜா சில முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது.

இந்தத் தகவல் அதிமுக தலைமையின் காதுக்கு வந்திருக்கிறது. இதனால் கட்சியின் பெயர் தேவையில்லாமல் பாதிக்கப்படும் என்றும் அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். இது சம்மந்தமாக ஓ.பி,எஸ்.–ஐ அழைத்து விவாதித்துள்ளார். ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து மழுப்பலான பதில் வரவே அதிரடியாக ஓ. ராஜாவை கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தை தயார் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் எடப்பாடி. அதுமட்டுமல்லாமல் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி,எஸ் – யிடமும் அந்தக் கடிதத்தில் கையெழுத்து வாங்கி  அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்.


தனது தம்பியைத் தன்னை வைத்தே கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடியின் மீது கடும் அதிருப்தியில் ஓ.பிஎஸ். உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8 வழிச் சாலைப் பிரச்சனையின் போது எடபபடியின் மகன் மற்றும் சம்மந்தி பெயர்கள் அடிப்பட்டன. அப்போது அவர்களைக் கட்சியை விட்டு நீக்கினாரா ? என்ற கேள்வியையும் ஓ.பி,எஸ் –எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஓ.பிஎஸ்- ஈ.பி.எஸ் இடையே கட்சியில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக பனிப்போர் வெடித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :