டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி திடீர் கைது
வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதை கண்டித்து நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் வைகோ மீது சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிங்களர்களின் இந்த செயலை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றிகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்புலிகள் அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேர் அங்கு சென்றுள்ளனர். அவர்களை நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தடுத்து நிறுத்தியுள்ளார். தடையை மீறி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு புறப்பட்ட திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேரும் செல்லும் வழியில் டீ கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் 10 காவல்துறையினர் அவர்களை மூன்று கைது செய்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.