வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (16:34 IST)

கணவருக்கு ஆபத்து ; புதுப்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி -மைத்துனர்

கணவருக்கு ஆபத்து எனக்கூறி புதுப்பெண்ணை மந்திரவாதியும், மைத்துனரும் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம் லசார்ட் கேட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஹபூர் மாவட்டத்தில் பில்கா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு துணி வியாபாரிக்கு கடந்த 15ம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டார். 
 
அன்று இரவு தம்பதிக்கு  முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது. அதை அருந்திய அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதன்பின், கணவருக்கு பதிலாக ஒரு மந்திரவாதி மற்றும் மணமகனின் தம்பி ஆகியோர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், நடந்த உண்மையை அறிந்து கதறி அழுதுள்ளார். அப்போது, அவரின் கணவருக்குள் தீயசக்தி இருப்பதால், அந்த மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே இது நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கணவருடன் முதலிரவு நடந்திருந்தால் அன்று இரவே அவர் இறந்து போயிருப்பார் என மந்திரவாதி மிரட்டியுள்ளார்.
 
இதையடுத்து, ஒரு வாரத்திற்கு பின், பாதிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீரட்டில் உள்ள லாசரி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதையடுத்து, அந்த மந்திரவாதி மற்றும் மைத்துனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.