செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:14 IST)

கல்லூரி மாணவியை கற்பழித்த சாமியார்: கைது செய்து சிறையில் அடைப்பு!

கல்லூரி மாணவியை கற்பழித்த சாமியார்: கைது செய்து சிறையில் அடைப்பு!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் சாமியார் ஒருவர் தனது ஆசிரமத்துக்கு வந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பலாஹரி மஹாராஜ் என்ற சாமியார் ஆசிரமம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.  இந்த ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தனது ஆசிரமத்துக்கு வந்த பக்தர் ஒருவரின் மகளை இந்த சாமியார் தனியாக அழைத்துள்ளார்.
 
கல்லூரி ஒன்றில் படிக்கும் 21 வயதான அந்த மாணவியை தனியாக அழைத்த சாமியார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி குறித்த சாமியார் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாமியாரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இதனை விசாரித்த நீதிபதி சாமியாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனையில் சாமியார் பலாஹரி மஹாரஜ் பலாத்காரம் செய்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.