திங்கள், 5 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (12:55 IST)

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை: தமிழக அரசுக்கு திருமாவளவன் நன்றி

Thirumavalavan
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் திருமாவளவன் தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 
 
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தமிழகத்தின் பல பகுதிகளில் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதியை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் நடத்த இருந்த ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு நன்றிகள் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்