1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:58 IST)

பி.எப்.ஐ. மீதான தடையை எதிர்ப்பவர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள்- ஆர்.எஸ்.எஸ்.

rss pfi
பி.எப்.ஐ. மீதான தடையை எதிர்ப்பவர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள்- ஆர்.எஸ்.எஸ்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு சீமான் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடை என்பது மிகவும் தேவையான ஒன்று என்றும், நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மேலும்  இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்டாமல் தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்றும் நாட்டின் அமைதி நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.