1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (12:49 IST)

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

ops bharathiraja
இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
பிரபல இயக்குனர் பாரதிராஜாவை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவரது வீட்டில் சந்தித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அதன் பிறகு அவர் உடல் நலம் தேறி விட்டார் என்பதும் தெரிந்ததே
 
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் அவரை பார்த்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
 
இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜாவின் சிஷ்யர் கே. பாக்யராஜ் சமீபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது