உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் மட்டும் கிடைத்து ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளில் விடுதலை சிறுத்தை கட்சியும் ஒன்று. இதன் காரணமாக அந்த கட்சி எம்.எல்.ஏ வன்னியரசுக்கு முதலமைச்சர் விஜய் அமைச்சர் பதவியும் கொடுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த திமுகவினர் திமுக கூட்டணியில் இருந்ததால்தான் விசிகவுக்கு வாக்குகள் கிடைத்தன. அமைச்சர் பதவிக்காக நன்றி இல்லாமல் தவெக கூட்டணியில் திருமா இணைந்துவிட்டார் என பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எந்த விஜயை வைத்து என்னை உளவியல் ரீதியாக சோர்ந்து போக வைக்க நினைத்தீர்களோ!.. விஜய் தனித்து நின்று 108 இடங்களை வென்ற விஜய்.. செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான மக்கலை ஈர்க்கும் ஆற்றலை கொண்ட விஜய்.. என்னை அழைத்து உளுந்தூர்பேட்டை மாநாட்டை பார்த்துவிட்டு பாராட்டும் அளவுக்கு என் மீதும், விசிகவின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார் என பேசினார்.
மேலும் தவெகவுடன் கைகோர்த்து இருப்பது காலம் இட்ட கட்டளை.. விசிக அதிகாரத்தில் பங்கு பெற இதைவிட வேறு என்ன நல்ல வாய்ப்பு இருக்கிறது? டெல்லியில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் கூட நாம் விமர்சிக்கும் பாஜக சிறிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி தருகிறது.. ஆனால் திமுக அப்படி அல்ல என பேசியிருக்கிறார்.